Saturday, November 15, 2014

சந்திரமங்கள யோகம்

சந்திரமங்கள யோகம் ...

சந்திரனின் செயல் பாடுகள் எண்ண ஓட்டம் தெளிவான மனநிலை எந்த ஒரு சூழ்நிலையிலும் மனதை திடமாக வைத்து கொள்ளும் பக்குவம் நாம் செய்யும் செயல்களை ஆரம்பம் முடிவு இவற்றை தொடங்கி வைப்பதும் முடித்து வைப்பதும் சந்திரனின் இயக்கம் ஆகும்....

நமது ஜாதகத்தில் எந்த ஒரு காரகம் கிரகம் தனது யோகத்தினை அல்லது வேலைய செய்வது என்றால் சந்திரனை மையமாக வைத்து செயல் படும் ...

உங்கள் ஜாதகத்தில் சந்திரமங்கள யோகம் இருக்கிறது என்றால் சந்திரன் செவ்வாய் சேர்க்கை அல்லது கேந்திரமாக இருந்தால் மட்டும் யோகத்தை தந்து விடாது அவர்கள் இருக்கும் பார்வையில் முறையில் இடைவெளி சரியான அளவில் இருந்தால் மட்டும் யோகத்தினை தரும் ....அதன் இடைவெளி என்பது சந்திரன் இருக்கும் ராசியில் இருந்து செவ்வாயின் தூரம் அதாவது டிகிரி எவளவு உள்ளதோ அதன் அடிபடையில் யோகத்தை தரும்....

அதன் விதிகள் என்ன பார்ப்போம்....

சந்திரனுக்கு நான்கில் செவ்வாய் இருந்தால் சந்திரன் இருக்கும் டிகிரியில் இருந்து (பாகை) 90 டிகிரிக்கு மேல் செவ்வாய் இருந்தால் தான் யோகத்தின் பலனை தரும் ...

சந்திரனுக்கு 7-ல் செவ்வாய் இருந்தால் சந்திரன் இருக்கும் பாகையில் இருந்து 180 டிகிரிக்கு மேல் இருந்தால் தான் பலனை தரும் ...

சந்திரனுக்கு 10-ல் என்றால் சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து 270 டிகிரிக்கு மேல் இருந்தால் தான் பலனை தரும்......

அடுத்து வரும் /////

No comments:

Post a Comment