Tuesday, December 23, 2014

சனி பார்வை -3

சனி பார்வை -3

சனி மட்டும் தான் இங்க கெடுதல் செய்யும் அதிகாரம் உள்ளவரா என்று பார்கையில் தனித்து நிற்கும் சனி எந்த விதத்திலும் பாதிப்பு தருவது இல்லை.....

தொடர்புகள் மட்டும் தான் அதன் தொடர்பான பாதிப்புகள் மனிதர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது..மக்களுக்கு ஒரு கஷ்ட வந்து விட்டால் சனியின் மேல் பழி போட்டு தப்பித்து கொள்ளும் மனோபாவம் ஏற்படுத்த பட்டுள்ளது ..மக்களுக்குள் ....

சனி எப்படி ஒரு பாதகமான பலனை தருவர் என்று பார்கையில் சனியின் பகை கிரகமான செவ்வாயின் தொடர்பு இல்லாமல் ஒருவருக்கு விபத்தும் உடல் பாகங்களில் அறுவை சிகிச்சை செய்ய படுவது இல்லை எனலாம்...செவ்வாய் சனி தொடர்பு இல்லாமல் இங்க யுத்தம்களும் போர்களும் நடைபெறுவது இல்லை என்பது வரலாறு உண்டு...

சனி ஜாதகத்தில் வக்கிரம் பெற்று ஒருவருக்கு சனியின் பாதிப்புகள் தருவது இல்லை வக்கிரம் பெற்ற ஒரு கிரகம் தனது காரக தன்மையே முழுமையாக இழந்து விடுவதால் பாதிப்பு என்பது மிகவும் குறைவாகவும் நன்மையே மிகவும் நிறைவாகவும் தந்து விடுகிறது...

நமக்கு அனைவர்க்கும் நன்கு அறிமுகம் ஆனா நகைச்சுவை நடிகர் ஒருவரின் வாழ்வில் வந்த அஷ்டம சனி புகழின் உச்சில் வைத்து அழகு பார்த்தது..அவரை நினைக்காத புகழ் பணம் செல்வாக்கு என்று குறுகிய காலத்தில் அனைத்தையும் தந்தது கன்னியில் சனி அமர்ந்த காலகட்டம்.....https://www.facebook.com/524461884297114/photos/a.524670604276242.1073741828.524461884297114/752844831458817/?type=1&theater

No comments:

Post a Comment