நோய்களும் பிரச்சினைகளும் மனிதன் வாழ்வில் சந்திக்கும் முக்கியமான துயரம்களில் ஒரு பகுதி எனலாம்.நமக்கு வரும் நோயானது ஒரு குறிப்பிட தசை புத்தியில் நமக்கு வந்து செல்லும் சிலருக்கு நிரந்தரமாக தங்கி விடும்.அது போல் ஜோதிட ரீதியாக மிக எளிமையாக நோய் வரும் காலம் கண்டு அறிந்து விழிப்புணர்வுவோடு இருக்கலாம் ....
லக்னம் மற்றும் ஆறாம் இடம் இதில் எவை பலம் மிக்கது என்று பார்கையில் லக்னத்தை விட ஆறாம் இடம் பலமாக இருந்தால் நிச்சயம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எல்லை என்ற கருதலாம்..முக்கியமாக ஆறாம் இடம் பலம் பெற்று லக்னம் பலம் இழந்தால் நிச்சயம் நமது வாழ்வில் நோயின் பிடியில் காலம் கழியும்...
சரி நோய்கள் என்றால் ஆறாம் பாவம் மட்டும் தானே என்று கேட்டால் ராசி கட்டடத்தில் இருக்கும் அணைத்து கட்டமும் உடலின் பாகங்களின் வரைபடம் தான் அதில் 27 நட்ச்சத்திரமும் உடலின் குறிப்பிட்ட பகுதியே சுட்டி காட்டும்.....
ராசியில் முதல் ஆறு வீடு வரை வலது பக்கத்தையும் 7 முதல் 12 வீடு வரை இடது பக்கத்தையும் உடலில் தெரிவிக்கும் பாவமாகும்,,,,நாம் முதலில் பார்க்க வேண்டிய இடமாக ஆறாம் பாவம் இருப்பினும் ஆறாம் அதிபதியோடு வீட்டோடு தொடர்பு கொள்ளும் நட்ச்சத்திர கிரகம்கள் நோயே உண்டாகும்...

No comments:
Post a Comment