ஜாதகருக்கு வயது 43 ஆகுது இதுவரை திருமணம் நடைபெறவில்லை.வேலையும் சரியாக கிடைக்கவில்லை தற்போது வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார் இவர் என்னிடம் கேட்ட கேள்வி ஏன் இதுவரை எனக்கு வேலை கிடைக்க வில்லை ஜாதகம் பலமாக இருந்தும் வேலை அமையவில்லை என்ன காரணம் என்று வினவினார்.....?
எப்பொழுது திருமணம் ஆகும் ?
ஜாதகம் மிகவும் பலமாக உள்ளது கிரங்களும் நல்ல நிலையில் உள்ளது எனக்கும் சிறு குழப்பம் வேலை ஏன் சரியாக அமையவில்லை ஜாதகருக்கு நன்றாக ஆராய்ந்து பார்கையில் சில தகவல்கள் எமக்கு கிடைத்தது..
லக்னம் அதிபதி சுக்கிரன் பலம் இழந்து நீச்சம் பெற்று 5-ல் உள்ளார் லக்னா யோக தர்மாகருமாதிபதிகள் சனி ஆகி லக்கனத்தில் உள்ளார்.ஜாதகனுக்கு இலக்கன அதிபதி பலமிழந்து விட்டலா நிச்சயம் அவரால் தனித்து செயல்பட முடியாத நிலையும் எதிலும் தனித்துவமாக பிரகாசிக்க முடியாத திறனை உண்டாக்கி விடும்...
இதில் பதாகதிபதி சனி 1-ல் அமர்வது மந்தமான போக்கும் அதிகம் யோசிக்கும் தன்மையும் சுக்கிரன் 5-ல் இருப்பது மிகந்த கற்பனையில் மிதக்கும் போக்கை தரும் சனியே அஷ்டமா அதிபதி குரு பார்ப்பது பலமான பிரம்மாஹத்தி தோஷம் என்ற சொல்லலாம்...ஜிவன காரகன் தொழில் காரகன் இருவரும் இங்க அஷ்டமா பதாகதிபதி ஆகி சம்பந்தம் பெறுவது ஜாதகனுக்கு யோகத்தை செய்யாது என்பது எனது கருத்து....
எல்லா ஜாதகத்திலும் ஒரு குறிப்பிட்ட கிரக சேர்க்கை மற்றும் தொடர்புக்கள் ஜாதகனை முழுமையாக இயக்க செய்யும் அப்படி எந்த கிரகத்தின் வீரியம் ஜாதகத்தை ஆளுமை செய்கிறது என்பது கண்டு அறிந்தால் பலன் சொல்லுவது மிகவும் எளிது ஆகிவிடும்....
திருமணம் ஆகவில்லை ஏன் என்று பார்ப்போம் முதலில் களத்திர ஸ்தானதிபதி செவ்வாய் உச்சம் பெற்று 9-ல் உள்ளார்.செவ்வாய் உச்சம் என்றாலும் ராகுவோடு சேர்க்கை அடைவது பலவீனம் அதை விட பலவீனம் ராகுவின் கிரகண சூழச்சியில் ஒரே டிகிரியில் இருப்பது செவ்வாய் பலம் இழந்து விட்டார் என்ற சொல்லலாம்..ஆண்களுக்கு களத்திர காரகன் சுக்கிரன் பலம் பெறுவது மிகவும் அவசியம் சுக்கிரனும் நீச்சம் ஒரு பக்கம் களத்திற ஸ்தானத்திபதி செவ்வாய் வலிமை இழந்து விட்டார்.காரகன் சுக்கிரன் நீச்சம் பெற்று விட்டார்.திருமணம் எப்படி நடக்கும் தசைகள் சாதகமாக இல்லாமல்...
வேலை ஏன் சரியாக அமையவில்லை என்ற கேள்வியும் இருக்கும் எனது பார்வையில் ராசியில் 10-ம் அதிபதி அம்சத்தில் நீச்சம் மற்றும் அம்சத்தில் 10-ம் அதிபதியான சுக்கிரன் ராசியில் நீச்சம் இதுவும் பெரிய பலவீனம் ஆகி விட்டது
இவருக்கு அடுத்து அடுத்து வந்த தசைகள் சுக்கிரன் சூரியன் சந்திரன் தசைகள் சாதகமாக இல்லாமல் போய்விட்டது ஏன் என்று பார்க்கலாம் நாளை .....
ஜோதிட ஆலோசனைக்கு .....தொடர்பு கொள்ளவும் ..நன்றி


No comments:
Post a Comment