Friday, April 17, 2015

மறைவு பாவம்-2


லக்னத்துக்கு ஆறு எட்டு பனிரெண்டாம் அதிபதிகளின் தசைகள் சிலருக்கு யோகத்தையும் பலருக்கு கஷ்டம் அவமானம் பொருள் இழப்பு நோய்களை தந்து மனிதனை பாடாபடுத்துகிறது...
இதில் ஆறாம் அதிபதி தசையே ஜாதகனுக்கு நோய்களுக்கு அஸ்திவாரம் போடும் இடமாக உள்ளது.ஆறாம் பாவமும் லக்னம் பாவமும் ஒன்ருகொண்டு ஆறு எட்டாக செயல்படும் ஆறாம் பாவத்தின் வலிமை செயல் திறன் எட்டாம் பாவமான லக்னம் வலிமை அடைந்தால் மட்டுமே பலம் பெறும்...
லக்னம் பலம் பெறாமல் ஆறாம் இடத்தின் தசை வந்தால் மனிதனுக்கு நோய்களை தந்து அவற்றால் கடைசி வரை போராடும் நிலையும்...
ஆறாம் எட்டு ஏழில் கேது அமைந்து தசை வந்தால் பலருக்கு கேன்சரும் வயிற்றில் கட்டி வந்து அதனால் பாதிப்பும் சந்திரன் கேது ஆறில் அமர்ந்து ஆறாம் இடத்தின் தசை வருமானால் பெண்களுக்கு கர்ப்பை பிரச்சினையும் தருகிறது...

ஆறாம் இடத்தில் அஷ்டமாதிபதி சம்பந்தம் அல்லது ஆறாம் அதிபதி அஷ்டமா அதிபதி சம்பந்தம் ஏற்பட்டு அதன் தசைகள் நடக்குமாயின் தனது தகுதிக்கு மீறிய கடன் வாங்கி அதனால் அவமானம் பொருள் இழப்புகள் தந்து விடுகிறது...

No comments:

Post a Comment