எமது நண்பர் ஒருவர் சென்ற மாதம் குழந்தை பிரசவத்துக்கு சரியான நேரம் வேண்டும் குறித்து தர சொன்னார்...நானும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை குறித்து தந்தேன் என்ன குழந்தை பிறக்கும் என்று கேட்டார்.ஆண் குழந்தை என்று சொன்னேன் மறுநாள் போன் செய்து நீங்கள் சொன்னது தப்பு பெண் குழந்தை பிறந்து விட்டது என்றார்.சந்தோசம் என்றேன்
அதை நண்பர் சென்ற வாரம் மறுபடியும் போன் செயதார் அவர் வாடகை இருக்கும் வீட்டின் பெண்ணுக்கு சிரியன் நேரம் கேட்டார்கள் என்றார்.நானும் ஒரு இலக்கணத்தை சொன்னேன் அந்த நேரம் நன்றாக உள்ளது.அவர் மறுத்துவிட்டார் ராகு நான்கில் உள்ளது அந்த பெண் சோரம் போய்விடுவாள் என்றார் நானும் நீங்கள் எப்படி பெண் என்று சொல்லுகிறீர் பையன் தான் இது உறுதியாக சொன்னேன்.நீங்கள் போன முறை தப்பாக சொல்லி விட்டீர் ஆண் குழந்தை என்றீர் பெண் பிறந்து விட்டது என்றார் அதை போல் வேறு லக்னம் வேண்டும் ராகு நாலில் இருப்பது வேண்டாம்.நானும் எவளவு விளக்கம் அளித்தேன் ஒரு கிரகம் நாலில் இருப்பதால் மட்டும் சோரம் போய்விட மாட்டாள் என்று அவர் ஒத்துகொள்ளவில்லை ..பலதிபிகை புத்தகத்தில் நீங்கள் நன்றாக படித்து பார்க்கவும் என்பதை என்னையே படிக்க சொன்னார்.அப்போ நீங்கள் நன்றாக ஜோதிடம் படித்து உள்ளீர் .நீங்களே நேரம் குறித்து தரவும் சொல்லி விட்டேன் ...
இன்று அதை நண்பர் call செய்தார் நீங்கள் சொன்னது போல் ஆண் குழந்தை தான் பிறந்தது அவர்கள் ஊரில் குறித்து தந்த ஜோதிடர் ரிஷப லகனத்தில் பிறந்தது எனபதை சொன்னார்..
ஒரு ஜோதிடன் எல்லாம் நேரமும் சரியாக பலன்களை சொல்லி விட முடியாது ஏன் என்றால் ஜோதிடனுக்கு மனம் என்ற ஒன்று உள்ளது அவை தெளிவாக குழப்பம் இல்லாமல் இருந்தால் தான் மட்டுமே பலன்களை சரியாக சொல்ல முடியும்..எல்லா நேரமும் ஒருவன் பலன்களை சரியாக சொல்லி விடுவான் என்றால் கடவளின் அவதாரமே......இயற்கை பல மறைக்க பட்ட ரகசியம்களை முழுமையாக மறைத்து கொண்ட நம்மை இயக்கம் செய்கிறது என்பதை மறக்க வேண்டாம்..
புத்தகமும் படிப்பு அறிவும் உங்களை அதன் வட்டத்துக்கு குள்ள மட்டுமே வைத்து இருக்கும்...வட்டதை நீங்கள் தாண்டி விரிவு அடைய வேண்டுமானால் சுய முயற்சியும் அனுபவம் மட்டுமே அதன் சாவிகள்

No comments:
Post a Comment