திருமணம் முறிவு (விவாகரத்து )
இந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி எட்டு வருடத்துக்கு பிறகு கணவரின் நடத்தை சரி இல்லாத காரணத்தால் விவாகரத்து கேட்டு நீதி மன்றம் சென்று உள்ளார்....
கும்ப லக்னம் கும்ப ராசி குடும்பதிபதி குரு எட்டில் மறைவு 7-ம் அதிபதி சூரியன் எட்டில் மறைவு எட்டாம் அதிபதி புதன் ஒன்பதில் வக்கிரம்....
பெண் பிராமின் வகுப்பை சேர்ந்தவள் ஆண் முஸ்லிம் மதத்தை சார்ந்தவர் இருவரும் காதல் மணம் செய்துள்ளர்னர் குடும்பத்தை எதிர்த்து.லண்டனில் வசித்து வந்தர்னர்..
திருமணம் நடைபெறும் காலம் குரு தசையில் செவ்வாய் புத்தியில் திருமணம் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது குடும்ப அதிபதி எட்டில் மறைவு புதன் வக்கிரம் 9-ம் இடம் பாதிப்பு குரு எட்டில் மறைந்தாலும் பாக்கியதிபதி செவ்வாயின் சாரம் செவ்வாய் இருப்பது 7-ம் இடம் என்பது திருமணம் என்ற வாழ்கை அமைந்து உள்ளது.
7-ம் அதிபதி சூரியன் அம்சத்தில் ராகுவோடு சேர்க்கை தனதிபதி குரு மற்றும் புதனின் தொடர்பு செவ்வாயின் தொடர்பு ராகு என்பது முஸ்லிம் மதத்தை தெரிவிக்கும் புதன் என்பது காதலை குறிக்கும் வக்கிர புதன் என்பதாலும் புதன் ராசியில் 9-ம் இடத்தில வக்கிரம் என்பதும் ஒன்பதாம் இடம் என்பது தன் சார்ந்த குலமும் ஜாதியே தெரிவிக்கும் புதன் அங்கு வக்கிரம் பெறும் நிலையில் அனைத்தையும் முரண்பாடுகளாக தன் வாழ்கையே ஏற்படுத்தி உள்ளது
சனி தசையில் புதன் புத்தியில் ஆரம்பித்த இவர்களது பிரச்சினை தசை புத்திகள் சாதகமாக வரை உறவே முறிவு இல்லாமல் காலம் சென்றுள்ளது..சனி நிற்பது ஆறாம் அதிபதியான சந்திரன் சாரம் அம்சத்தில் தசை நாதன் நட்ச்சத்திர நாதன் இருவரும் ஒன்றுகொன்று எட்டு மற்றும் ஆறில் உள்ளனர்...
சந்திரன் சனி தொடர்பு என்பது வெறுப்பும் எதிலும் மனம் ஓட்டதா நிலையும் சஞ்சலமும் தர வல்லது...சந்திரன் ராகு நிற்பது எதையும் தகர்த்து சமுதாயித்தில் எப்படி வேண்டுமானாலும் வாழும் அமைப்பும் இது இல்லை என்றால் வேறு ஒரு வாய்ப்பு என்று தன்னை தானே புதுப்பித்து கொள்ளும் தன்மையே காட்டும்....எந்த ராகு பெண்ணுக்கு கணவனை தந்ததோ அந்த ராகு ஆறிலும் வீடு தந்த சந்திரன் நட்ச்சத்திரத்தில் சனியும் அமைவது ராசியில் எட்டாம் இடத்தில தசை என்பது அவளவு சிறப்பு அல்ல முறிவே தந்துள்ளது .....வரும் அக்டோபர் மாதம் கேது சந்திரனை தொடும் காலம் நிரந்தர சட்ட ரீதியாக பிரிவே தரும்...
நான் மேல் சொன்ன காரணத்தை விட செவ்வாய் ஏழில் அமர்ந்து கோட்சார சனி பத்தாம் பார்வையாக பார்ப்பதும் ராகு எட்டாம் இடத்தில செல்வதும் காரணம் ....ஆகும்

No comments:
Post a Comment