நாம் கோவிலுக்கு செல்கிறோம் நமது மனபாரம்கள் பிரச்சினை நோய் கடன் திருமணம் ஆகாதவர் திருமணம் வேண்டியும் ஆனவர்கள் அதில் நிம்மதி இல்லாத நிலையுமாக மனதில் பல்வேறு குழப்பம்களோடு செல்கிறோம் வருகிறோம் ஏதேனும் மாற்றம்கள் அடைந்ததா என்று பார்கையில் பெரும்பாலான மக்கள் சொல்லுவது போகாத கோவில் இல்லை செய்யாத வேண்டுதல் அல்ல எதுவும் மாற மாறவில்லை என்றே அலுத்து கொள்கிறர்கள்....
எந்த மனநிலையில் சென்று வந்தால் நீங்கள் ஒரு உள்முகதன்மையும் மாற்றமும் உங்களுள் உண்டாகும்
தங்களது பூர்வ புண்ணிய கர்மாக்களின் தாக்கம்கள் மட்டுமே இந்த வாழ்வின் பிரதி பலிப்பு
பூர்வ புண்ணியம் அனுமதியும் அவைகளின் வெளிப்பாடே ஒன்பதாம் இடம் .....
நீங்கள் கோவிலுக்கு செல்வதின் நோக்கம் எந்த பிரச்சினை மனதில் பாரமாக உள்ளது அதை இறக்கி வைக்க மட்டுமே செல்கிறீர் நிச்சயம் நோக்கம் இல்லாமல் காரியமும் செயல்களும் நடைபெறாது என்பது தெளிவு ....
ஒரு குறிப்பிட்ட நட்ச்சத்திரம் பாவம் மட்டுமே நீங்கள் அன்றைக்கு செய்யும் செயலை தீர்மானம் செய்வதாக இருக்கும் அந்த பாவம் நட்ச்சத்திரம் உங்களின் எண்ணத்துக்கு மறைவு பாவமாகவும் அஷ்டமா மற்றும் பதாக அதிபதியாக இருப்பின் அல்லது திதி சூனிய கிரகமாக இருந்தால் எதுவும் மாறாது......பலன்களும் நடைபெறாது ..
கோவிலுக்கு செல்கிறீர் உங்களின் மனநிலையில் விட்டில் இருந்தே அதறுக்கான தயார் நிலையில் இருக்க வேண்டும் வேறு சிந்தனைகள் எதுவுமின்றி வாங்கும் மனநிலையோடு உங்களை நீங்களாக ஒரு பார்வையாளனாக பார்க்கும் நிலையும்
கோவிலுக்கு சென்று திரும்பு வரை தேவை இல்லாத குடும்ப கதை சண்டை நண்பர்களை பற்றி பேசி அரட்டை அடிப்பது என்று எதை பற்றியும் பேசாமலும் யாதொரு சிந்தனை அல்லாமல் உங்களின் நோக்கம் இறைவனை தரிசனம் செய்ய போகிறோம் என்று மனமும்
கோவில் உள் தாங்கள் சென்ற பிறகு கோவிலில் சுத்தமான நிலை மட்டுமே உள்ளது என்றும் அங்கும் இங்கும் அலைபவர் அனைவரும் இறைவன் மட்டுமே நீங்களும் அவராகவே உள்ளீர் என்ற மனநிலையையே உங்களுள் வளர்த்து கொண்டு விட்டால் நீங்கள் போவீர் வருவீர் நடுவில் நீங்கள் என்றே மாயே மறைந்து உங்களுள் நடக்க வேண்டியவை தானாக நடைபெறும்

No comments:
Post a Comment