Saturday, May 9, 2015

இங்கிலாந்த்தேர்தல் வெற்றி யாருக்கு


David William Donald Cameron
இங்கிலாந்த் பிரதமர் டேவிட் கமெரன் அவர்கள் மீண்டும் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதா ?
அவரது லக்னம் சிம்மம் ராசி மிதுனம் தற்போது நடைபெறும் சனி தசையில் ராகு புத்தியில் சூரியன் அந்தரம் வருகிற 15-ம் தேதி வரை உள்ளது
சனி இவரது ஜாதகத்தில் எட்டில் மறைவு பெற்று வக்கிரம் பெற்று பின்னோக்கி வந்து உள்ளார்.சனி வக்கிரம் என்பது ஒரு ஜாதகனுக்கு யோகத்தை தர கூடியதாக அமையும்..சனி தனது சுயசாரத்தில் இருப்பதும் சனி நின்ற வீட்டின் அதிபதி குரு உச்சம் பெற்று பார்ப்பதும் சனி தசை மிக சிறந்த யோகமும் நாட்டை ஆளும் தகுதியும் தந்து உள்ளது எனலாம்...
சிம்ம லக்னம் அதிபதி சூரியன் சுய வீட்டில் ஆட்சி பெற்று சுக்கிரன் புதனொடு சேர்க்கை என்பது புதசுக்கிர யோகமும் புதாதித்திய யோகமும் சிவா சக்தி யோகமும் தனலாபதிபதி யோகமும் 12-ல் செவ்வாய் நீச்சம் பெற்றாலும் குரு உச்சம் என்பதால் நீச்ச பங்க ராஜயோகமும் குரு மங்கள யோகமும் நிரந்த ஜாதகம் இவரது....
சூரியனுக்கு 12-ல் குரு செவ்வாய் அமைய பெற்று அங்க ஒரு நீச்சம் கிரகம் ஆட்சி அல்லது உச்ச கிரகம் இருப்பின் அந்த ஜாதகர் நாட்டை ஆளும் தகுதியும் அதிகார சக்தியும் எதிர்பாராத நிலையில் மிக பெரிய பதவியே அடையும் வல்லமை தரும் என்பது விதி
சந்திரனுக்கு 11-ல் அல்லது 3-ல் ராகு இருப்பது ராஜயோகம் என்று பழைய பாடல்கள் சொல்லுகிறது...
இன்றே கிரக நிலை படி தசை நாதன் சனி வக்கிரமாக உள்ளார் ....பிறப்பு ஜாதகத்திலும் வக்கிரம் என்பதால் நன்மை செய்யும் நிலையிலும் நேரம் இவருக்கு சாதகமாக உள்ளதே காட்டுகிறது...
பிறப்பு ஜாதகத்தில் அரசு கிரகம் ராஜகிரகமான சூரியன் ஆட்சியும் தற்போது உள்ள கோச்சர நிலையில் சூரியன் உச்சம் புத்தி நாதன் ராகு ஜாதகத்தில் மேஷத்தில் இருப்பதும் சூட்சம பலம் அடைந்து உள்ளது மிக பெரிய பலம்...சூரியன் அந்தர நாதன் என்பதும் அடுத்த சிறப்பு...
பிறந்த ஜாதகத்தில் குரு அமர்ந்த அதை இடத்தில குரு தற்போது உச்சம் பெறுவதும் அடுத்த சிறப்பை காட்டுகிறது.....
சனி சூரியன் ராகு இந்த மூன்று கிரகமும் தற்போது உள்ள நிலையில் ரொம்ப சாதகமாக உள்ளது செவ்வாய் பத்தாம் இடத்தில் உள்ளது இவை எல்லாம் மீண்டு இன்றயே தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பர் என்றே காட்டுகிறது////

No comments:

Post a Comment