லக்ன புள்ளி அதுவே நமது ஆரம்ப நிலை அங்க இருந்தே மற்ற கிரகம்கள் நமக்கு எவ்விதமான பலன்களை தர உள்ளது என்பதை காட்டும்.நீங்கள் உங்கள் வாழ்வினை அணுகும் விதத்தை சுட்டி காட்டும்...
சிம்மம் லக்னம் என்றால் இதன் அதிபதி சூரியன் 3-ல் நீச்சம் பெற்றுள்ளது அதனால் இவர்கள் தைரியம் இல்லாதவராக இருப்பர் யோகம் அற்று வாழ்வார் என்று எல்லாம் சொல்லி விட முடியாது..சூரியன் நீச்சமே அதில் மாற்றம் இல்லை.முதலாவதாக சூரியன் இங்க நீச்சம் என்றாலே தைரியம் அளவுக்கு அதிகமாக இருக்கும் அந்த தைரியமானது எதையும் உடைத்து எரியும் வல்லமை கொண்டதாக இருக்கும் சூரியனின் அடிப்படை குணம் கவுரவம் மரியாதை தன்னை தலைமை பதிவியில் முன்னிறுத்தி கொள்ளுவது இங்க நீச்சம் பெற்ற சூரியன் வேறு மாதுரி செயல்படுவார் நல்ல நிலையில் உள்ள சூரியன் தன்னை நேர்மையாக நிலை நிறுத்தி கொள்ள ஆசைபடும் குணம் தரும் நீச்சம் பெற்ற சூரியன் தன்னை மறைமுகமாக வேலை செய்து மற்றவரை சாய்த்து வெற்றி கொள்ளும் குணம் தரும்....
சூரியன் நீச்சம் பெற்று விட்டார் வேறு என்ன செய்வார் பார்க்கும் கிரகத்தின் சேர்க்கை பெறும் கிரகத்தின் தன்மைகளை மேலும் பிரகாச படுத்தி தன்னையும் சேர்த்து தருவர் .சூரியனோடு செவ்வாய் சேர்க்கை பார்வை பெறுமாயின் அதிகாரம் செய்யும் குணமும் மற்றவரை அடக்கி ஆளும் பாங்கும் எதிலும் அவசரம் கோபம் வேகம் காரியத்தை செய்து முடிப்பதில் அறிவே விட தனது பலத்தை உள்புகுத்தி வெல்ல நினைப்பார்கள்....

No comments:
Post a Comment