Friday, July 31, 2015

குரு சுக்கிரன் சேர்கை பலன்கள்

குரு சுக்கிரன் சேர்க்கையே பெரும்பாலும் தவறான சேர்கையாக பார்க்கிறர்கள் தேவ குரு அசுர குரு இருவரும் ஒரு வீட்டில் சேர்ந்து விட்டால் இருவரின் காரக பாவத்தை அழித்து விடுகிறார்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை இட்டு ஜாதகனுக்கு தீய பலன்களை தருகிறார்கள் என்பது போல் பல ஜோதிடர்கள் தனது கருத்தாக பலன் காலம் காலமாக சொல்லி வருகிறர்கள்...
உண்மை நிலை எதுவாக இருக்கும் என்று பார்கையில் குரு சுக்கிரன் சேர்க்கை பெற்றவன் அவன் எடுத்து கொண்ட துறையில் சரித்திரம் படைக்கிறான்!!!
குரு என்பவர் யார் நமக்கு ஜீவ காரகன் அறிவுவே தருபவன் சமுதாயத்தில் மதிப்பு மிக்க மற்றவருக்கு போதிக்கும் குருவாக நம்மை செதுக்கி மேலான இடத்தில் வைத்து அழகு பார்ப்பவன் குருவால் ஒருவன் மேலும் பட்டை தீட்டி பிரகாசம் அடையவைப்பார் தவிர தரம் தாழ்ந்து விழும் வேலையே செய்ய மாட்டார் என்பதே குரு பார்க்க கோடி நன்மை என்கிறார்கள் இந்த உலகில் எது நல்லது எது கெட்டது என்பதை பிரித்து அதை எப்படி நிவிர்த்தி செய்வது என்பதை கண்டு அறிந்து மக்களுக்கும் உலகத்துக்கும் நல்லதொரு வழிகாட்டியாக விதையே விதைத்து அதன் மேல் மனித சமுதாயம் வாழ வழி வகுக்கும் குரு தான் குரு பகவான்..

சுக்கிரன் காமத்துக்கு மட்டுமே நாம் நினைவு படுத்தி கொள்கிறோம் அல்லது ஆடம்பரமான வாழ்கைக்கு சுக்கிரனை பேசி வருகிறோம் உண்மையில் சுக்கிரன் என்பர் இல்லை என்றால் உலகமே வெறுமை நிலையே அடைந்து விடும் இங்க ஆக்கம் பிறப்பு இல்லாமல் ஆகி விடும் ஆக்கம் என்பது பிறப்பு மட்டும் அல்ல நீங்கள் செய்யும் வேலையாக இருக்கட்டும் படிப்பதாக அமையட்டும் ஒன்றே சிந்திப்பதை இருக்கட்டும் அதில் ஆழ்ந்து மிகவும் சந்தோசமான ஒரு வித மிதப்பு தன்மையோடு சிரிப்பாக இருக்கலாம் ஒரு பாலினம் மறறொரு பாலினத்தை பார்த்து பரவசம் அடைவது போன்றவே எதுவாக இருக்கட்டும் அனுபவிப்பது ஒன்று உங்களுள் வந்தால் அங்க சுக்கிரன் வந்து விடுவார்....

ஒருவர் இசை துறையில் உள்ளார் அவரது பாடல்கள் காலம் கடந்து அந்தந்த தலைமுறையும் விரும்பி கேட்டுக்கும் அளவு அழியாத பாடல்களை தருகிறார் என்றால் அவருக்கு குரு சுக்கிரன் சேர்க்கை நிச்சயம் இருக்கும் இசை ஞானி இளையராஜா அவர்களுக்கு குரு சுக்கிரன் சேர்க்கை கடகத்தில் உள்ளது இசை வெள்ளத்தில் அனைவரையும் மிதக்க வைக்கிறார்,,,,
இங்கு குரு ஆன்மிக தன்மையில் சாத்விகமாக ஒரு பொருளை தன் மதம் சார்ந்த கொள்கையில் பிடிப்பை தருகிறார் வேத சாஸ்திரம் அதை பற்றிய அறிவே போதித்து வழி காட்டுகிறார்
சுக்கிரன் எங்கும் ஆனந்தம் எதிலும் ஆனந்தம் என்ற மத கோட்பாடுகள்யாவற்றையும் உடைத்து அவனுள் ரத்தத்தை சுண்டி விட்டு போதையே தந்துகாலம் நேராமல் பார்க்காமல் ஆனந்தத்தின் உச்ச கட்டம் வரை சென்று வெறுமையின் எல்லையே டச்சு பண்ணாமல் டச்சு செய்து வருகிறார் ..
குரு சுக்கிரன் சேர்க்கை கெடுப்பார் என்பதை விட பலன்களை அளவுக்கு அதிகமாக அள்ளி தருவார்கள் என்றே சொல்லலம் குரு அனுபவ அறிவே தந்து ஒரு காரியத்தை செய்ய சொல்லுவர் சுக்கிரன் நீ யோசிக்க எல்லாம் வேண்டாம் இறங்கு அனுபவி மற்றதை பார்த்து கொள்ளலாம் என்பர்.சுக்கிர அவன் தொட்டதை எல்லாம் வெற்றி மாலையாக எந்த வித சூத்திரமும் இல்லாமல் புகழின் உச்சத்தை தொட வைப்பார் அப்போ குரு சுக்கிரன் சேர்க்கை பெறுகிறது என்றால் இருவரின் கிரக பாவகம் என்ன அவர்கள் அமர்ந்து உள்ள வீடு நட்ச்சத்திரம் இவைகளை நோக்காமல் நாம் ஒரு முடிவுக்கு மொட்டையாக வருவது அனுபவத்தை தந்து விடாது என்கிற எனது அனுபவ கருத்தை இங்க முன் வைக்கிறேன்...
அறிவா செல்வமா என்றால் ஒன்று இல்லாமல் ஒன்றே அனுபவிக்க முடியாது நாம் குரு சுக்கிரன் சேர்க்கை உள்ளது அவை எந்த பாவம் என்பதை ஆராய்ந்து முடிவுக்கு வருவது நல்லது ....மேலும் விளக்கம் எழுதுகிறேன் ........

No comments:

Post a Comment