நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Tuesday, October 27, 2015
கனடா பிரதமர் Justin Trudeau
Posted on October 23, 2015 by admin
கனடா நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியைத் தழுவ லிபரல் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கனடாவின் புதிய பிரதமராக ஜஸ்டின் ரூடோவுக்கு பதவி ஏற்றுள்ளார்..
25-12-1971 9-27pm ottawa-வில் பிறந்தார் சிம்ம லக்னம் மீனம் ராசிரேவதி நட்ச்சத்திரத்தில் பிறந்துள்ளார் இவரது தந்தையின் முன்னாள் பிரதமரே இவருக்கு அரசியல் ஆர்வம் பெரியதாக இல்லை என்றாலும் கடந்து மூன்று ஆண்டுகளில் அரசியல் பிரவேசம் எடுத்து கட்சியினை நாடு ஆளும் வல்லமையே உண்டாக்கி உள்ளார்
சிம்ம லக்னம் என்றாலே தனித்துவம் மிக்கது எளிதில் எதையும் கிரகித்து அதில் ஆளுமை செலுத்த வல்லது அதன் அதிபதி இருக்கும் இடம் பொறுத்தே லக்னத்தின் செய்லபடும் வேகம் முயிற்சி தரும் சூரியன் இருப்போதோ தனுசு ராசியான வில் அம்பினை குறிக்கும் வெற்றி ராசி காலபுர்ஸா ராசியின் தலைமை பீடமான மரிதையான பதவியே தந்து அழகு பார்ப்பது சூரியன் இருப்பதோ கேதுவின் நட்ச்சத்திரம் கேது 12-ல் என்பதால் ஜாதகர் ஆன்மிக சிந்தனை மிக்கவராக பொருள் மேல் பற்று அற்றவராக அனைவர்க்கும் எதையும் எதிர்ப்பார்க்காமல் உதவிகள் செய்யும் குணத்தை தரும்… சூரியனுக்கு ஆறில் வக்கிரம் பெற்று இருப்பதும் சூரியன் சனி தொடர்பே தருகிறது ஜாதகரின் தந்தை அரசியல் வாதியாக இருப்பினும் இவர அதில் அதிகம் கவனம் செலுத்தவில்லை
சூரியன் சனி சம்பந்தம் எதிர்பாராத அரசியல் வாழ்வில் வெற்றி பெற வைத்தது… கிரங்களின் மாயாஜாலம் என்பார்கள் அது போல் நான்கு கிரகங்கள் பரிவர்த்தனை பெற்று உள்ளது மூன்று எட்டுக்கு அதிபதி செவ்வாய் குரு பரிவர்த்தனை பத்து ஆறு பரிவர்த்தனை மிக பெரிய ராஜயோக அமைப்பே தந்துள்ளது
நடப்பு தசை சூரிய தசை ஐந்தாம் வீட்டில் அமர்ந்து பனிரெண்டில் அமர்ந்த கேதுவின் சாரம் ஆகி இருப்பது சிம்மாசனம் தந்து விடவில்லை கேது சனி சாரம் சனி மக்கள் சக்தியே எழுச்சியே தரும் 10-ல் வக்கிர பலத்தோடு உள்ளார் கேதுவே சனி மூன்றாம் பார்வையாக பார்க்கிறார் குரு ஒன்பதாம் பார்வையாக பார்வை செய்கிறார் சுக்கிரன் ஏழாம் பார்வை செய்கிறார் முக்கியமாக பூர்வ புண்ணியாதிபதி ராஜ்ய ஸ்தானதிபதி பார்வை மிக சிறந்த யோகத்தை தந்து உள்ளது
ஒரு மனிதன் மிக பெரிய இடத்தை அடைய வேண்டுமானால் அவனது ஜாதகத்தில் பகுவித்திய யோகம் அமையனும் தொழில் ஸ்தானதிபதி சனி ரிஷபத்தில் ராகுவோடு அதற்கு ஒன்பதில் சுக்கிரன் ராகு அதை போல் சுக்கிரன் சனி பரிவர்த்தனையின் போதும் ராகுவே தொடர்பு கொள்வார் சனி பின்னோக்கி நிலையில் சூரியனை தொடர்பு கொள்ளவர்…மிக சிறந்த ராஜயோக அமைப்பு ஆகும்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment