நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Thursday, November 5, 2015
உடல் நோயும் கிரகங்களும்
Posted on November 5, 2015 by admin
ரோக பாவத்துக்கு(ஆறாம் அதிபதி எந்த இடத்தில இருப்பினும் அந்த இடம் நமது உடல் உறுப்பில் பாதிப்பினை தரும் இடமாக அமைகிறது எனலாம் தலை முதல் உள்ளம்கால் முதல் உள்ள பகுதினை 12 பாகமாக பிரித்து உள்ளனர் அதில் 10 பாகை விதம் மூன்று பங்காக 30 பாகை பிரிக்க பட்டுள்ளது
ஒரு கிரகம் மேஸா பாவத்தில் இருக்கிறது என்றால் மேஷத்தின் பலனை தர வேண்டும் என்று அர்த்தம் இல்லை அவை முதல் பாகமான மேஷம் ரெண்டாம் பாகம் சிம்மம் மூன்றாம் பாகம் தனுசு அதாவது தலையில் ஏற்பட்ட பாதிப்பு காலிலும் இதயத்துக்கும் வயிற்று பகுதியிலும் உண்டாலாம்…
ஆறாம் வீட்டில் ஒரு கிரகம் வக்கிரம் பெற்றாலும் அல்லது சனி செவ்வாய் ராகு கேது போன்றே அசுப கிரகம்கள் சேர்க்கை பெற்று ஆறாம் வீட்டை பாதிப்பு அடைய வைத்தால் முதல் 10 டிகிரியில் இருப்பின் ஆறாம் பாவ பகுதியான வயிறு அடி பகுதி பாதிக்க படுகிறது அடி முதுகு பகுதியும் தேய்மானம் பெறுகிறது அதே 10 முதல் 20 டிகிரியில் இருப்பின் 10-ம் இடம் பாதிப்பு பெறுகிறது எலும்பு தேய்மானம் மூட்டு பகுதியில் நீர் கோத்தல் போன்றே பிரச்சினைகள் உண்டாகிறது
புதன் ஆறாம் வீட்டில் அமர்ந்து பாதிப்பு அடைந்தால் கால் மூட்டு பகுதியில் வலி இருந்து கொண்டே இருக்கும் நரம்பு பிரச்சினைகள் அவற்றில் பாதிப்பு தரும்..
சூரியன் இருப்பின் எலும்பு மஞ்சையில் பிரச்சினையும் சந்திரன் இருப்பின் நீர் கோர்ப்ப்பதால் ப்ரச்சனை தரும்…
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment