நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Wednesday, June 29, 2016
யோக திசையும் வாழ்கையே மாற்றும் புத்தியும்
யோகமான தசை காலம் நடப்போருக்கு யோகமான வாழ்வு அமையும் என்பதே அடிபடையான விஷியமாக பார்க்க பட்டாலும் நிதர்சன வாழ்வுக்கு நடைமுறையில் பல முரண்பாடுகளை தருகிறது.பணம் பொருளாதாரம் தந்தாலும் மற்ற வீடுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் மற்ற விஷியம்கள் முழுமை பெறாமல் போகிறது… 12-லக்னத்துக்கும் முதல் தரமான யோகம் தரும் பாவமான 5-9-10-ம் பாவம்களும் கேந்திர பாவமான 4-7-10-ம் வீட்டின் அதிபதிகள் திரிகோணஸ்தானத்திலும் கேந்திர அதிபதிகள் திரிகொணமும் பெறுவது முதல் தர யோகத்தை மனிதனுக்கு வாரி வழங்குகிறது .. யோகம் காரகன் தசை நடப்பில் இருப்பினும் யோகத்தை மட்டுமே செய்வார் என்கிற நினைப்பு பல நேரம்களிலும் பாதகத்தை தந்து விடுகிறது…அப்படி எனக்கு ஒரு அனுபவ பாடத்தை தந்தது சிங்கப்பூர் சென்ற போது அங்க fb-க்கு நண்பர் ஜோதிடம் பார்க்க வருகையில் அவரது நண்பருக்கு ஜாதகம் பார்க்க வர சொன்னார் என்ன விஷயம் என்றால் அவருக்கு பத்து நாளுக்கு முன்பு வேலையில் இயந்திரத்தில் கவனகுறைவால் தனது ஆள்காட்டி விரல் நசுங்கி விட்டது அவற்றே எடுக்க வேண்டிய கட்டமும் நெருங்கி விட்டது…கொஞ்சம் அவருக்கு வீட்டுக்கு வந்து ஜாதகம் பார்க்க வேண்டும் என்றார்… ஒரு நாள் வீட்டுக்கு சென்று ஜோதிடம் பார்க்க ஆரம்பித்த பிறகு கை வெட்டப்பட்டக்கான காரணம் என்னால் உண்மையில் கண்டுப்பிடிக்க முடியவில்லை ஏன் என்றால் அப்படி பட்ட மிக மோசமான நேரம் நடக்கவில்லை காரணம் கடக லக்னம் ரிஷப ராசி நடப்பதோ குரு தசை லக்னத்தில் உச்சம் பெற்று பலமான லக்னம் கேந்திரம் பெறுகிறார்… கோட்சாரமும் பயப்படும் படி இல்லை எனது பார்வையில் ரொம்ப நேரம் என்னால் காரணம் தேடவே முடியாத அளவு தவிப்பில் இருந்தது என்னமோ உண்மையே… ஜாதகத்தை பாருங்கள் சூரியன் புதன் செவ்வாய் சேர்க்கையும் சுக்கிரன் ஆட்சியும் பெறுகிறார் வாழ்கையில் என்ன பிரச்சினை வந்தாலும் அதை யாவும் சகித்துகொண்டு முன்னேறும் ஜாதகம் லக்னம் அதிபதி சந்திரன் 1-ல் உச்சம் தான் நினைத்ததே கடைசி வரை போராடி வெற்றி கொள்வதில் கடுமையாக உழைக்கும் வல்லமை தரும்…
சொந்த தொழில் வேலை எதுவாக இருப்பினும் அதில் தன்நிகர் அடையும் பாக்கியமும் கவுரமும் தானாகவே உண்டாகும் யோகத்தில் பிறந்துள்ளார்…அது எல்லாம் சரி தற்போது ஏன் இவருக்கு இந்த இழப்பு குரு யோக காரன் என்பதில் மாற்று கருத்து இல்லை குரு நின்ற நட்சத்திர அதிபதி சனி மாரகத்திபதி சனி நிற்பதோ சிம்மத்தில் எட்டாம் இடத்து அதிபதி என்பதால் குரு யோக காரகன் என்றாலும் கடுமையான போராட்டத்தில் உழைப்பில் யோகத்தை தரும் ஏன் குரு தசையில் சனி புத்தியில் தற்போது உண்டான அதை போன்றே ஒரு நிலையே உண்டாக்கி இருக்கும்….
சனி புத்தி முடிந்து விட்டது தற்போது நடப்பதோ குரு தசையில் ராகு புத்தி ராகு முன்றாம் வீடான கன்னி ராசியில் அமர்ந்துள்ளது குரு தசையில் ராகு புத்தியில் சனி அந்தரம் நடக்கும் காலத்தில் இவரது ஆள் காட்டி விரல் இயந்தரத்தில் வெட்டபடுகிறது… இந்த நடந்து என்ன என்பதே சிறிது நேரம் ஆய்வுக்கு பிறகு அறிந்து கொண்டேன் பிறப்பில் சனி சிம்மத்தில் அங்க ராகு செல்கிறார் கோட்சாரத்தில் சனி இருக்கும் வீட்டுக்கு….
சனி ஐந்தாம் இடமான அதாவது கை விரல்களை குறிக்கும் ஐந்தாம் வீட்டுக்கு வருகிறார் கர்மா காரகன் சனி பகவான் ராகு தாத்தாவே குறிக்கும் சனி வேலை ஆளே குறிக்கும் தாத்தா வகையில் உண்டான தோஷமும் அதன் வழியில் உண்டான சம்பவமும் ஜாதகருக்கு சனி விருச்சக ராசிக்கு வரும் காலம் பத்தாம் பார்வையில் நடத்தி வைத்துள்ளது …. தாத்தா வகையில் தன்னோடு அடிமையாக வேலை செய்த நபரின் கை அறுக்கபட்டுள்ளது அதன் தன்மை அதனால் உண்டான தோஷம் பேரனுக்கு உண்டாக்கி உள்ளது……
குரு ராகு சனி மூன்று சம்பந்தம் பல விஷியம்களை மாற்றி அமைக்க வல்லது ……. குரு சனி ராகு சம்பந்தம் பெறும் காலமும் அவை தொடர்பு நமது முன்னோர்களின் வழியில் உண்டான தோஷத்தின் வெளிப்பாடு ஆகும்…..அதற்க்கான பரிகாரம் முன்பே செய்து கொண்டால் கொஞ்சமாவது தப்பித்து கொள்ளலாம் …நன்றி ஜோதிட ஆலோசனை பெற விருப்ப உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்- +918428211819 (உள்நாடு கட்டணம் 650ரூபாய் -வெளிநாடு -15௦௦rs)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment