

அனுபவம் எனக்கு விபரம் தெரிந்த காலத்தில் இருந்தே ஒரு ஜோதிடன் ஜாதகத்தை பார்த்தவுடன் முதலில் சொல்வது ஏழரை நாட்டு சனி நடைபெறுகிறது நேரமே சரியில்லை ஏழரை வருடம் கஷ்டம் தான் என்பார்கள் அதோடு விரய சனி நடப்பதால் பொருள் பணம் விரயம் ஆகும் முன்பாக நீங்களே பணத்தை அசையாத சொத்தில் முதலீடு செய்து கொள்ளுகள் வீடு கட்டும் யோகம் உள்ளது அடுத்து மங்கு சனி உடலே படுத்தி எடுத்து விடும் வாக்குல சனி பேச்சில் நிதானம் தேவை என்பது போல் ஒரு கதையே சொல்லி முடிப்பார்கள் எனக்கே ஏற்பட்ட சில அனுபவம்கள் ஜாதகத்தை கொண்டு சென்று பலன் கேட்டால் இப்போ எதுவும் பேசாத குரு மாறி குரு பலம் வரட்டும் அப்போ பார்க்கலாம் தற்போது பலன் பார்த்தால் எதுவும் பலிக்காது என்பார்கள்….இன்னும் எத்தனை…
ஓர் உண்மையான ஜோதிடன் ஜாதகத்தை பார்த்தவுடன் பலன் சொல்லணும் அதை விட்டு விட்டு தற்போது ஏழரை சனி நடைபெறுகிறது என்றும் ஏழரை சனிக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து எழுதுவதும் பலனை முன்நிறுத்துவதும் ஜோதிடனின் அறியாமையே வெளிபடுத்துகிறது அவர்கள் அனைவரும் ஒரு வட்டத்துக்குள் மாட்டி கொண்டுள்ளார்கள் என்பதே அர்த்தாம் சுய ஆராச்சி அனுபவ வெளிப்பாடு ஜோதிடத்தின் புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவராக உள்ளார் என்பது வருத்தக்க விஷயம்…
சரி நானும் ஏழரை சனி நடப்பில் உள்ளவர்கள் ஜாதகம் யாவும் எடுத்து பார்த்தேன் கஷ்டமும் வேதனையும் அவமானமும் படுகிறார்களா என்றால் 5 சதவிதம் மக்கள் கஷ்டம் அனுப்பவிகிறார்கள் தசை புத்தி சரி இல்லாத காரணத்தால் அதுவும் அதை போன்று சனியின் பகை கிரகத்தின் தொடர்பு பிறப்பு ஜாதகத்தில் சனி வரும் காலத்தில் உள்ளவர்கள் அதன் சார்ந்த பாதிப்புகள் தருகிறது ஏழரை சனி பலருக்கு கர்மம் செய்ய வேண்டியே நிலையே தருகிறது சிலருக்கோ ஆன்மிக யாத்திரை செல்லும் வாய்ப்புகள் உண்டாக்கிறது பெரும்பாலும் ஏழரை சனியில்தொழில் துறையில் பொருளாதாரத்தில் உச்ச நிலையே அடைந்து உள்ளார்கள் என்பதே நிதர்சன உண்மை
No comments:
Post a Comment