Friday, September 2, 2016

திருமண வாழ்வில் கோள்களின் விளையாட்டு

திருமணம் பந்தம் என்பது சராசரியாக சாதாரண ஒரு நிகழ்வாக பெரும்பாலும் பார்க்கபடுகிறது அதிலும் மனிதனின் குணமே எது ஒன்று மிக எளிமையாக எளிதாக கிடைக்க பெறுகிறதோ அவற்றின் மேல் உள்ள நிலையே மிக சாதாரண ஒன்றாகவே பார்க்கிறேன்….. ஆண் பெண் மனித உறவுகள் சமுதாயத்தில் அதற்க்கான நெறிமுறையோடு சரியான பாதையில் சென்றால் மட்டுமே மனிதனின் அடுத்தகட்ட பரிணாமத்தில் உலகம் செல்லும் வகை ஏற்படும் இதில் முரண்பாடுகளும் நம்பகத்தன்மை இல்லாத பட்சத்தில் வாழ்கை சூனியம் ஆகி விடுகிறது….இருபாலாரில் ஒருவர் திசை மாறி சென்றாலும் வாழ்கை கேள்வி குறியே… திருமணத்துக்கு முன்பு உண்டாகும் உறவினால் ஏற்படும் பிரச்சினை தீர்வே இல்லாத நிலையே அடைகிறது அதனால் குடும்பே ஸ்தம்பித்து போகிறது ஜோதிட சாஸ்திரம் இலைமறைகாயாக பலவற்றை சொல்லி விட்டு சென்றாலும் அதுவே பலரின் வாழ்கைக்கு பலியாக ஆகுகிறது……ஓர் ஆண் பெண் நிலைதடுமாறி தப்புசெய்கிறார்கள் என்றால் அதற்கு முன்பு மிக சரியான வாழ்கையே வாழ்ந்தவன் மொத்தமாக மதி மயங்கி விடுகிறான் ஒரு ஜோதிடனாக பார்கையில் மிக தெளிவாக அவர்களின் ஜாதகத்தில் அதற்க்கான சேர்க்கை அமைப்பு இருப்பதே பார்க்க முடிகிறது…. இதை பற்றி விபரம்கள் வேண்டாம் ஜோதிட ரீதியாக…….!!! திருமணம் ஆகவில்லை ஆனால் தனது தகுதிக்கு ஏற்றபோல் ஒருவன் கிடைக்கிறான் கொஞ்சம் பழகுகிறார்கள் எதோ ஒரு காலகட்டம் இருவரில் ஒருவர் தனது தேவையே பூர்த்தி ஆனா பிறகு டாடா சொல்லி விட்டு போகிறார்கள்…இது ஒரு பக்கம் போகிறது மறுப்பக்கம் மாற்றான் மனைவியே நேசிப்பதும் அபகரிப்பதும் அல்லது பெண்கள்திருமணமான ஒருவனை நேசிப்பதும் அவனை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்ற ரீதியில் தானும் கேட்டு இன்னொரு பெண்ணின் வாழ்கையே கெடுப்பதும் என்ன விதத்தில் ஞாயகமாக இருக்கும் அதை தான் இந்த சமுகம் செய்கிறது…. என்னிடம் ஓர் ஜாதகம் அப்படி ஒன்று வந்தது பெரும்பாலும் நிறைய ஜாதகம் இது போன்று கேள்வி கேட்டு அலைபேசியில் அழைப்பார்கள் முடிந்த அளவு அறிவுரை சொல்லி முடிந்து கொள்வேன் இதை நீங்கள் செய்வதால் நீங்கள் எதன் வழியில் பாதிப்பு உண்டாக்கி கொள்வீர் என்பது போல் கிரக நிலையே விளக்கி சொல்வேன் நிற்க.. வயது 42 நடக்கிறது திருமணம் இன்னும் ஆகவில்லை எப்பொழும் நடக்கும் என்பது கேள்வி ?சரி திருமணம் என்பது தான் எப்படி ஆகும் வீட்டில் பார்த்த அல்லது இவர் பார்த்து கொள்வாரா அல்லது திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்ந்து விட்டு சுகத்தை அனுபவித்த பிறகு திருமண பந்தத்தில் இணைவாரா… மகர லக்னம் களத்திராதிபதி சந்திரன் எட்டாம் இடத்தில் அமர்ந்து போகம் மற்றும் சயனகாரகன் குரு ரெண்டாம் இடத்தில் அமர்ந்து இருவரும் சமசப்தமா பார்வையில் இருப்பது திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் தரிக்கும் நிலையே உண்டாக்கும் பெண்களுக்கு அதி முக்கிய ஸ்தானமான நான்காம் வீட்டில் அஷ்டமாதிபதியும் இருப்பது திருமணத்துக்கு முன்பே அந்த ஆடவனோடு இல்லறத்தில் ஈடுபட வேண்டும் என்பது விதி….சரி அவை எந்த கால கட்டம் என்று பின்னோக்கி வருடத்தை கேட்டால் ஆம் அது கடந்து விட்டது என்று பதில் வருகிறது… தற்போது என்ன நிலை மாற்றான் பெண்ணின் கணவரே திருமணம் செய்ய வேண்டும் என்று அவனோடு சேர்ந்து வாழ்கிறாள் சில ஆண்டுகளாக தன்னை ரெண்டவதாக திருமணம் செய்ய சொல்லி கேட்கிறாள் முடியாது என்கிறார் அந்த நபர்….இது ஏன்! தான் காதலிக்கும் ஒருவனோடு தன்னை பங்கிட்டு கொள்வதும் அவனையே திருமணம் செய்வதும் குரு சந்திரன் தொடர்பு சரி …… மாற்றான் கணவன் மேல் என்ன ஈர்ப்பு எப்படி வந்தது சந்திரனுக்கு திரிகோணத்தில் உள்ள புதன் கற்பு ஸ்தானத்தில் இருக்கிறது புதன் செவ்வாய் பரிவர்த்தனையில் திருட்டு உறவு அதில் ஒருவித சுகத்தை அனுபவிக்கும்நிலையே உண்டாக்கி தந்துள்ளது……சரி ஓர் ராசியில் எந்த கோள்களும் இல்லை பார்வையும் இல்லாத பட்சத்தில் அந்த பாவம் முழுமையாக செயல் இழந்துவிடும் விதி கடக ராசிக்கு கிரக பார்வையோ தொடர்போ இல்லை இதையே இருண்ட வீடு என்பார்கள் அந்த பாவம்பாதிக்கபடும் வேலை செய்யாது.. சந்திரன் ராகு கேதுவுக்கு மையபுள்ளியில் அமர்ந்துமொத்தமாக செயல்படமால் இருக்கிறார் எட்டாம் பாவமும் பாதிப்பு அடைந்துள்ளது அதோடு அல்லாமல் 2003முதல் 2013 வரை சந்திர தசை நடப்பில் சந்திரன் நிற்பது கேதுவின் நட்சத்திரம் இதை விட ஒரு தோஷம் விளக்க வேண்டியது இல்லை…… இவரது எண்ணம் எதுவாக இருப்பின் நேர்மையான வழியில் இருந்து இருப்பின் நல்லதே செய்து இருக்கும் கேது இருப்பதோ ஐந்தாம் பாவத்தில் குறுக்குவழி குறுக்கு சிந்தனைகள் வேதனையே தரும் … பொதுவாக இவருக்கு சனி செவ்வாய் சேர்க்கை சந்திரன் எட்டில் விரயாதிபதி 2 -ல் இந்த கதை எல்லாம் சரியாகபொருந்தி வாராது,,.,,,பலன் சொல்லலும் முறையில்…….இதுபோல் பல பேருக்கு திருமணமும் நடந்துள்ளது…பார்க்கும் விதம் வேறு

No comments:

Post a Comment