இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றேன் தெப்பக்குளத்தின் மேலிருந்து நானும் எனது நண்பரும் பேசி கொண்டு பார்க்கையில் நீண்ட தொலைவில் காவி உடை அணிந்த சன்யாசி ஒருவரே கண்ட நிமிடமே அவரே நோக்கி என்னை ஈர்த்தது என் மனம் ,,,,,
எனது நண்பரிடம் உடனே வா.......குளத்தின் அருகில் ஒருவர் உள்ளார் அவரிடம் பேச வேண்டும் என்றேன்...
எனது நண்பரிடம் உடனே வா.......குளத்தின் அருகில் ஒருவர் உள்ளார் அவரிடம் பேச வேண்டும் என்றேன்...
வேகமாக அவரை மிக நெருக்கமாக நெருங்கி பார்க்கையில் வியப்பு தாங்கவில்லைஏன் என்றால் மிக இளம் வயது வாலிபர் என்றே சொல்லலாம் அவரது கண்களை மீண்டும் உற்று நோக்கையில் நம்பவே முடியாத ஆனந்தமும் பிரகாசமும் தீர்க்கமும் என்னுள் உணர முடிந்தது.....
சற்று பேச்சு தரலாமே என்று பேச முயன்றேன் பம்பரமாக அங்குள்ள சிலைகளை வணங்கி கொண்டே செல்கிறார் ஒரு கணத்தில் எனது நண்பர் விடாதே எப்படியாவது பேச்சு கொடு என்றார் எனது அகங்காரத்தை விட்டு பேச முயன்றேன் பின் தொடர்ந்து ......
ஒரு வழியாக ஓர் இடத்தில் அமர்ந்து விட்டார் எனது கேள்வி இந்த வயதில் சன்யாசியாக ஆக எப்படி துணிவு வந்தது யார் தங்கள் குருநாதர் என்றேன்,,,,,,மிக பெரிய சிரிப்போடு எல்லாம் ஈசன் ஒருவனை எனக்கு என்று யாரும் குரு இல்லை ....அவன் நினைப்போடு அனுதினமும் வாழ்கிறேன் பிறந்த இடம் கன்னியாகுமரி என் மனமும் எங்கு செல்ல சொல்கிறதோ அங்க செல்வேன் சிதம்பரம் கோவிலின் அளவிட முடியாத சக்திகளை விவரித்தார்
தங்களுக்கு வயது 30க்குள் இருக்கும் என்று நினைக்கிறன் ஆம் எனது வயது 29 என்றார்...
ஆன்மிகத்தில் உள்ளீர் எம்பெருமானின் நினைவோடு அவரே மட்டுமே அனுதினமும் பூஜித்து வருகிறீர்என்றாவது ஒரு நாள் உங்கள் மனம் சலன அடைந்துள்ளதா சலனம் என்றால் உலக வாழ்வியல் தொடர்பு பணம் சம்பாதித்தல் குடும்ப உறவுகள் அல்லது நீங்கள் எம்பெருமானின் மேல் உள்ள பற்று ஏதோவொரு சந்தர்ப்பத்தில் மனம் வேறுபட்டு குறைந்து இருக்கிறதா....
அவரது பதில் பலவித அசைவுகளில் புரியாத பாஷையில் பேசி விட்டு தமிழில் சொன்னார் ஒரு காலம் அவை எமக்கு வந்தது இல்லை என்றார்
உங்கள் பிறந்த தேதி வருடம் நேரம் வேண்டும் தர முடியுமா என்றேன் ....அதற்கும் பலத்த சிரிப்போடு சிறிது யோசனைக்கு பிறகு விபரம்களை சொன்னார் சில கேள்விகளோடு யாம் பிறந்த நேரத்தில் பல குழந்தைகள் பிறந்துள்ளது அதில் யாம் அடைந்த நிலையே அனைவரும் அடைந்து இருப்பார்களா என்று கேள்வி கேட்டார் ஆம் ...உண்மையே இருப்பினும் தாருங்கள்....என்றேன்
நாம் பல சன்யாசிகளை பார்த்து இருந்தாலும் அவர்களோடு நெருங்கிய தொடர்பு இருப்பினும் ஜாதகம்களை பெறுவதில் பல சிக்கல்கள் உள்ளது ...ஜோதிடத்தில் சன்யாசி அமைப்புக்கு நெறைய விதிகளை தந்துள்ளார்கள் அவையாவும் நடைமுறை வாழ்வுக்கு சரியாக வருவது இல்லை என்பதே எனது கருத்து
ஒரு இளம் வயது சன்யாசி ஏன் இந்த வாழ்கைக்கு வந்தார் என்பது சில கிரக அடைவுகளின் காரணமாக இருக்கும் .....ரோட்டோரம் உள்ள வீதியிலே படுத்து உறங்கி ஒரு சன்யாசி எப்படி வாழ வேண்டுமா அப்படி வாழ்கிறார் இவை சாதரண விஷயம் இல்லை அதற்க்கான தீர்க்கமான மனபக்குவம் அமைப்பு இல்லை என்றால் சாத்தியமே இல்லை .....நாளை இவரது ஜாதகத்தை பற்றி எழுதிகிறேன் ..

No comments:
Post a Comment