Friday, October 7, 2016

ஜீவசமாதி அனுபவம்

நேற்று பாண்டிசேரிக்கு செல்லும் வழியில் மனம் ஏனோ அருகில் உள்ள சித்தார் சமாதிக்கு செல்ல தோன்றியது என்னையும் அறியாமல் வாகனத்தை சித்தர் பீடத்தின் அருகில் விட்டேன்

என்னோடு வந்த நண்பரோ என்ன வித்தியாசமாக பார்த்தார் சம்பந்தமே இல்லாமல் வேறு வேலையாக செல்கிறோம் இங்க ஏன் வந்தாய் என்பது போல் என்னை பார்த்தார் சிறிது நேரம்தரிசனம் செய்த உடனே அமர கூட விடாமல் வா போகலாம் அழைத்தார்

சற்று உட்கார்ந்து விட்டு செல்வோம் என்றேன் மீண்டும் அதை முறைப்பு அவரிடம் சரி தியானம் கூட செய்யாமல் விடை பெறும் நேரத்தில் ஓர் 75 வயதுக்கு மேல் உள்ள முதியவர் அவல் பொறி பிரசாதம்தந்தார் ஒரு ஓரமாக மீண்டும் அமர்ந்து விட்டார் சரி போவோம் கிளம்பியே என்னை பக்கத்திலுள்ள ஒரு தியானம் அறை மிக பெரியதாக கவர்ந்து ஈர்த்தது உள்ள சென்று பார்க்கையில் முதியவர் எங்களை நோக்கி வந்தார் விளக்கம் கேட்டேன் தியானம் முறை என்ன என்பது கேட்டேன்


எனக்கு தெரியவில்லை தான் ஒரு மாதமாகிறது வேலைக்கு சேர்ந்து என்றார் சரி ஐயா இந்த வயதான காலத்தில் நீங்கள் வந்து இருப்பது நீங்கள் செய்த மகாபுண்ணியம் வாழ்வில் மிக பெரிய சோதனைகளும் வேதனைகளும் பெண் பிள்ளை இழப்பும் சந்தித்து இன்று இங்க வந்து உள்ளீர் என்றேன் ஆம் நான் தற்கொலை செய்த கொள்ள கூட முடிவு பிழைத்து வந்துள்ளேன் என்று கண் கலங்கி சொன்னார்

நீங்கள் நாளையே தலைமுறைக்கு விட்டு செல்வது சம்பாதித்த சொத்துக்கள் அல்ல நாளையே தலைமுறைக்கு தற்போது கர்மாவால் எவை எல்லாம் உங்கள் குடும்ப அனுபவித்து உள்ளதோ அவை யாவும் இந்த சித்தர் கோவில் வழியாக சரியான பரிகாரத்தை செய்யவே வந்துள்ளீர் ஆதலால் நீங்கள் வேலையாக நினைக்காமல் சேவையாக முழு ஈடுபாடாக இருங்கள் சொல்லி கிளம்பு சமயம் நீங்கள் விருச்சக ராசியில் பிறந்து உள்ளீரா என்றேன்

ஆம் விருச்சக ராசி கேட்டை நட்ச்சத்திரம் என்றார் எப்படி ஐயா என்னோட ராசியே சரியாக சொன்னீர்கள் என்றார்.....கை எடுத்து கும்பிடு போட்டார் உங்கள் பெயர் என்ன அச்சுதானான் என்றார்...!!!!!


ஞாயிறு அன்று தியானத்துக்கு வருகிறேன் என்று கிளம்பினேன் அவரது ராசியே சரியாக கேட்டது ஒரு ஜோதிடனுக்கு சரியான அணுகுமுறையில் அனைத்தையும் பொருத்தி பார்த்தால் சரியாக சொல்வது சாத்தியமே..

புதியதாக வேலைக்கு சேர்ந்துள்ளார் சித்தர் கோவிலின் மகிமை தெரியாமல் யார் யாரோ வந்து செல்கிறார்கள் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் எதோ நடக்கிறது என்பதே மட்டுமே அறிந்து வேலை பார்த்து வந்தார்...

ஸ்ரீலஸ்ரீ வெட்ட வெளி சித்தர் என்வாயிலாக எதோ அவருக்கு சொல்ல இருந்தார் சொல்லி விட்டார் நான் அங்க கருவியாக இருந்தேன்......வேலை முடிந்து விட்டது

கருவியாக ஏற்று செயல்பட்ட எனக்கு சில மணி நேரத்தில் மனம் வலிக்கும் படியான சம்பவம் நடந்தது.....



இந்த உலக வாழ்வில் தாங்குவதிலும் கொடுப்பதிலும் எதுவாக இருப்பினும் நாமும் அந்த கர்மாவே அனுபவிக்க தயார் ஆகி விட்டோம் என்பதை காட்டுகிறது....

No comments:

Post a Comment